பொதுப்போக்குவரத்து பாலியல் துன்புறுத்தலில் 90% பெண்கள் – ஐ.நா தகவல்!

நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90 சதவீதமான பெண்கள் மற்றம் சிறுமியர் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் ரயில்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது கண்டிறியப்பட்டுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் குடிசன நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்படுவோரில் 4 சதவீதமானோரே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.15க்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளடங்கலாக 2500 பேரை உள்ளடக்கியதாக 9 மாகாணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஐக்கியநாடுகள் சபையின் குடிசன நிதியம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் பேக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சு பிரதமர் அலுவலகம் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்துள்ள ‘அவளின் பயணம் பாதுகாப்பானதா?‘ என்ற வேலைத்திட்டத்தின் அறிமுக நிகழ்விலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் திருமதி உனா மக்கோளி ( Una McCauley) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|