பொதுப்போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வு காண நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 30th, 2022

பொதுப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்படி எதிர்வரும் இரண்டு மாதங்களில் தற்போதுள்ள புகையிரத பயணங்களுக்கு மேலதிகமாக 50 புகையிரத பயணங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நீண்ட கால திட்டங்கள் தொடர்பில் மீண்டும் ஒரு தடவை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி எதிர்காலத் திட்டங்களை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குணரத்ன மற்றும் போக்குவரத்து துறை நிபுணர்களுடனான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: