பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!

Wednesday, April 22nd, 2020

இலங்கையில் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் –

தேர்தல் நடத்த முடியுமா இல்லை என்பதனை கூறுவது எங்கள் செயற்பாடு அல்ல. அது தேர்தல் ஆணைக்குழுவினால் எடுக்கும் தீர்மானம்.

எனினும் தேர்தல் நடத்துவதென்றால் அதற்கு அவசியமான அனைத்து ஆதரவினையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நாளில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உடல்களை அடக்கம் செய்ய வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது - ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி ...
இன்றுமுதல் அனைத்து முக்கிய இடங்களும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் - இராணுவ ஊடகப் பேச்சாளர்!
பொருந்தொற்றை கட்டப்படுத்த நாட்டுக்கு பூஸ்டர் தடுப்பூசி வேண்டுமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்க...