பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!

Monday, March 16th, 2020

திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சார்க் நாட்டுத் தலைவர்களுடன் விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது.

வீடியோ கொன்பிரன்ஸ் எனும் காணொளி ஊடான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் கருத்து மற்றும் அனுபவங்களை பகிர்வதன் மூலம் கொரோனாவை தடுக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மற்றும் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி கோட்டாபய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: