பொதுத் தேர்தலை வெற்றிகொள்வது தொடர்பில் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் ஆலோசனை!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் வெற்றியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதி செயற்பாட்டாளர்களுடன் விசேட ஆலோசனைக் கூட்டம் ஒன்று கட்சியின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் யாழ் மாநகர ஒருங்கிணைப்பாளர் நந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் யழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுகு பாலகிருஷ்ணன் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் தேர்தலில் நாம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எண்ணக்கருவை நிறைவேற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடயே கருத்து தெரிவித்த பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான றெமீடியஸ் பாமர மக்களும் வாழ்வியலில் வளமிக்கவர்களாக வாழவேண்டும் என்றும் வேற்றுமைகளோ பாரபட்சங்களோ இல்லாத மக்கள் நலனை மையமாக கொண்ட தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களை இம்முறை வலுவாக்க ஒற்றுமையாக நாம் உழைக்கவேண்டும் என்றார்.
Related posts:
|
|