பொதுத்தேர்தல் தொடர்பில் ஆராய அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்த!

Friday, November 29th, 2019


சகல கட்சித் தலைவர்களுக்கும் எதிர்வரும் 4ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமூகம் அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நான்காம் திகதி முற்பகல்10 மணிக்கு அனைவரையும் வருகைதருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைத்துள்ளார். அடுத்த தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, கட்சித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

விசேடமாக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணம் திருத்தம், அதுதொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடு, கட்சிகளின் இணக்கப்பாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிகபட்டுள்ளது.

Related posts: