பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022

நாட்டுக்குள் பொதுச்சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் செயற்பாட்டை வரவேற்பதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழகச் சமூகத்தின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு, நேற்று இடம்பெற்ற போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், தென்கிழக்கு, பேராதனை, களனி மற்றும் ரஜரட்ட உள்ளிட்ட 18 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பீடாதிபதிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேசச் சட்டங்களுடன் உள்நாட்டையும் இணைப்பது தேசியத் தேவையாக அடையாளம் காணப்படவேண்டும் எனக் கொழும்புச் சட்ட பீடத்தின் பேராசிரியர் வசந்தா செனவிரத்ன இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

ஒரு சமூகத்துக்கோ அல்லது குறிப்பிட்ட சிலருக்கோ அநீதி இழைக்கும் வகையில் சட்டத்தில் முரண்பாடுகள் இருந்தால், அவற்றை உடனடியாக நீக்கவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு என்பது ஒருமாய ஆவணமல்ல. அடிப்படைச் சட்டங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதைக் கருத்திற்கொண்டு, ஒரே சட்டத்தால் ஆளப்படும் நாட்டைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமென்றும் கொழும்புச் சட்ட பீடத்தின் பேராசிரியர் வசந்தா செனவிரத்ன இதன்போது தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: