பொதி செய்யப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் – செம்மணியில் தேடுதல்!

Monday, March 8th, 2021

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியிலிருந்து இன்று காலை ஆபத்தான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்களை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: