பொதி உறை அல்லது கொள்கலன் மீது சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் – நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியீடு!

சகல இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அறியப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் தவிசாளர் சாந்த நிரிஎல்லவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சகல பொருட்களினதும் பொதிகளுக்கு வெளியே, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேலதிகமாக, நிறை அல்லது தொகை, உற்பத்தி செய்த திகதி, காலாவதி திகதி, குறியீட்டு இலக்கம், உற்பத்தியாளரின் பெயர், பதிவு செய்யப்பட்ட முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிமுதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இணையத்தளம் மூலம் (Online traders) விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|