பொதிசெய்யப்பட்ட 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல்!
Saturday, May 14th, 2016
பிரபலமான வர்த்தக நிறுவனம் ஒன்றின் பெயர் பொறிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட சுமார் 63,000 கிலோகிராம் பாவனைக்குதவாத மிளகாய் தூள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒருகொடவத்த களஞ்சியசாலையில் வைத்தே இந்த பெருமளவான மிளகாய் தூள் பெக்கற்றுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த மிளகாய் தூள் பக்கெற்றுகள் பூஞ்சணம் பிடித்த நிலையில் காணப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மிளகாய் தூளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனவும் கொழும்பு புறக்கோட்டையிலுள்ள வியாபாரி ஒருவரே இதனை இறக்குமதி செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related posts:
கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
கொரோனா சந்தேகம்: இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர் அனுமதி!
|
|