பொசன் போய தினத்தை முன்னிட்டு புலிகள் அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு விடுதலை ஜனாதிபதி கோட்டாபய பொதுமன்னிப்பு!

Wednesday, June 23rd, 2021

பொசன் போய தினத்தை முன்னிட்டு சிறைகளில் நீண்ட காலம் உள்ள முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

விடுதலைசெய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப்புலிகளுக்காக செயற்பட்டு மிக நீண்ட காலம் சிறையில் உள்ளவர்கள் என அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டனை காலத்தை விடவும் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 216 கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: