பேஸ்புக் பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, June 15th, 2018

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சமுக வலைத்தளங்கள் தொடர்பில் 1100 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் முக்கியமான 10 வர்த்தகர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ஊடுருவும் செயற்பாடு குறித்த முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பாக தங்களது படங்களை தரவேற்றும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய படங்களை தரவேற்றும் போது நண்பர்கள் மாத்திரம் பார்க்கக்கூடிய வகையில் தனியுரிமையை வகைப்படுத்துவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் கணக்கில் தமக்கு அறிந்தவர்களை மாத்திரமே நட்பு பட்டியலில் இணைப்பதும், தாங்கள் அறியாதவர்களை நட்பு பட்டியலில் இணைக்காதிருப்பதும் சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: