பேஸ்புக் செயலி செயலிழப்பு – கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!

உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு அந்த நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ கணக்கில் பதிவொன்றை தரவேற்றியுள்ளது.
இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்லவென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை அந்த நிறுவனம் இதுவரை விளக்கவில்லை.
2008 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு பாதிப்பை பேஸ்புக் சந்தித்திருந்தது.
இதுவரை உலகளாவிய ரீதியாக 2.3 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது.
Related posts:
நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை!
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -பொது சுகாதார பரிசோதகர்...
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!
|
|