பேஸ்புக் கணக்கிலிரந்த 80 வீதமான போலி கணக்குகள் நீக்கப்படும்!

Saturday, July 28th, 2018

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் திறக்கப்பட்டுள்ள 80 வீதமான போலியான கணக்குகள், பேஸ்புக் தலைமையகத்தால் இவ்வாண்டின் இறுதிப் பகுதியில் நீக்கப்படவுள்ளது.

இத்தகவலை, இலங்கையின் கணினி அவசர தயார்நிலை ஒருங்கிணைப்பு மையத்தின் (CERT) முதன்மை தகவல்கள் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

CERT நிறுவனத்திற்கு இவ்வாண்டில் மாத்திரம் (நவம்பர் வரை) 3,400 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதில் பெரும்பாலான விடயங்கள் தொடர்பில் CERT நிறுவனத்தால் பேஸ்புக் நிறுவனத்திற்கு முறையிடப்பட்டுள்ளதோடு, ஏனைய முறைப்பாடுகள் உரிய முறைப்பாட்டாளர்களால், அவர்களது பெயரில் திறக்கப்பட்டுள்ள போலிக் கணக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் 80 வீதமான போலியான கணக்குகளை நீக்கும் என, CERT எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts: