பேஸ்புக்கின் நம்பகத்தன்மை தொடர்பில் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

Wednesday, July 17th, 2019

பேஸ்புக் கிரிப்டோகரன்சி திட்டம் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அரசியல்வாதிகள் பேஸ்புக் நிறுவனத்தை உண்மைத் தன்மையற்ற, நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என விமர்சித்து உள்ளார்கள்.

பேஸ்புக் லிப்ரா எனும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க செனட் வங்கி குழு பேஸ்புக் நிர்வாகியான டேவிட் மார்கஸை விசாரித்தது.

“தவறுகளுக்கு மேல் தவறுகளை பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது. எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற நிறுவனம் அல்ல பேஸ்புக்” என்று செனட்டர் செரோட் ப்ரவுன் கூறி உள்ளார். முதலில் பேஸ்புக் தங்கள் பிழைகளை சரி செய்துவிட்டு புதிய தொழிலில் இறங்கட்டும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

Related posts: