பேலியகொடை – நவீன மெனிங் சந்தை வர்த்தக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் திறந்துவைப்பு!

Friday, November 20th, 2020

ஆயிரத்து 192 வர்த்தக நிலையங்கள் அடங்கிய பேலியகொடை – மெனிங் வர்த்தக கட்டிட தொகுதி இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஸ அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பபட்டுள்ளது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ப மேலும் பிரதான பல திட்டங்களை விரைந்து ஆரம்பிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் முன்வைத்த வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த சந்தை வளாகத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த மெனிங் சந்தை வளாகம் 13.5 ஏக்கர் பரப்பளவில் முழுமை பெற்ற மொத்த விற்பனை நிலைய வளாகமாகியுள்ளது..அத்துடன் இந்த வர்த்தக கட்டிட செயற்திட்டத்திற்காக 6.9 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது

இதில் 600 வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளை கொண்ட வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணியாளர்களுக்கான ஓய்வு அறைகள் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவ வசதிகள் மத்திய நிலையம், வங்கி, உணவகம், அதிஉயர் குளிர் களஞ்சியசாலை மற்றும் விருந்தக வசதிகளும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு நகரில் ஏற்படும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வாக மற்றும் மக்களின் வசதிகளுக்கு அமையவே மொத்த மீன் வர்த்தக கட்டிடம் மற்றும் மொத்த மரக்கறி வர்த்தக கட்டிடம் என்பவற்றை பேலியகொடைக்கு கொண்டு செல்ல காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பேலியகொடைவுடன் தொடர்புப்பட்டுள்ளமை காரணமாக கொழும்பின் புற நகர் பகுதிகளுக்கு மொத்த விற்பனையை மேற்கொள்ளவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: