பேருந்து விபத்தில் சிக்கிய 35 பெண்கள் மருத்துவமனையில்!

Tuesday, April 3rd, 2018

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டு – ஹலம்பவட்டவன பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியதால் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 40 பெண் பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் காயமடைந்த பெண்கள் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை ஆராச்சிகட்டு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts: