பேருந்து  நிலையங்களின் சுகாதாரத் தன்மை தொடர்பில் முறைப்பாடுகள்!

Thursday, November 17th, 2016

தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பஸ் நிலையங்களில் உள்ள உணவகங்கள் தூய்மையை பேணாத நிலைகாணப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

பஸ் நிலையங்களில் உள்ள உணவகங்களில் மலசலக்கூடங்கள் முறையாக தூய்மை படுத்தப்படாமல் உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

அதனை தூய்மை படுத்துவதற்கான உரிமை தங்களின் நிறவனத்திற்கு இல்லாமையினால் குறித்த உணவங்களை பரிசோதித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவு விலை அதிகரித்து விற்பனை செய்தல் மற்றும் துப்பரவு இன்மை உள்ளிட்ட பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் பொது சுகாதார அதிகாரிக்கும் அறிவித்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

National-Transport-Commission

Related posts: