பேருந்து நடத்துநர் மீது கத்திக்குத்து – வட்டுக்கோட்டையில் சம்பவம்!

Thursday, December 13th, 2018

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடு கத்தி வெட்டில் நிறைவடைந்தது. காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இருந்து வட்டுக்கோட்டைக்குப் பயணித்த பேருந்தில் மூளாயில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

கத்தியால் வெட்டினார் என்று குற்றஞ்சாட்டப்படும் நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் வசிப்பவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரிகிறார். அவர் இரண்டு நாள்கள் விடுமுறையில் நின்றார். அதனால் காரைநகரைச் சேர்ந்த ஒருவரை தற்காலிகமாக இணைத்து விட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே காரைநகரைச் சேர்ந்தவர் கத்திக்குத்துக்கு இலக்கானார் என்று ஆரம்ப விசாரணையில் கூறப்பட்டது.

Related posts: