பேருந்து சாரதிகளுக்கு எதிரான சட்டம் !
Thursday, October 19th, 2017
அட்டவணையிடப்பட்ட நேரத்துக்கு பயண இலக்கை அடையாத பேரூந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.
பேருந்துகளின் பயண இலக்கு சரியான நேரத்துக்கு அடையப்படுவது இல்லை என்பது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் சாரதிகள் ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்திலும் சுமார் 15 நிமிடத்துக்கு மேலாக நிறுத்தி வைப்பதாகவும் ஒவ்வொரு பஸ்ஸுக்கும் ஆரம்ப நேரமும் பயண இலக்கை அடையும் நேரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு பஸ் சாரதிகள் சாதாரண வேகத்துடன் பஸ்ஸை செலுத்தக் கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்பிரகாரம் “குறிப்பிட்ட பயண இலக்கை சரியான நேரத்தில் அடையாதவர்கள் தொடர்பில் கண்காணிக்கவுள்ளோம். அவ்வாறு அவர்கள் சரியான நேரத்தில் இலக்கை அடைவதற்கு தவறுவார்களாயின் அவர்களுடைய மீள் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. பல பஸ்கள்இ சென்றடைந்த பின்னரே மீண்டும் அவர்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
இவையனைத்தையும் நேரத்தைக் கண்காணிப்பவர் அவதானிப்பார் என்றும் வீதி விசாரணை அதிகாரிகள் பலரும் பஸ் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடுகள் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் இரண்டுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பாகஇ பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்ய வேண்டுமாயின் 011 5559 595, 011 2871 353 மற்றும் 011 2871 354 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்யலாம் எனவும் இந்தக் கட்டுப்பாடுகள் தற்போது அமுலில் உள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|