பேருந்து கொள்வனவிற்கு பணம் செலுத்த தயார் – போக்குவரத்து அமைச்சு! 

Friday, November 16th, 2018

பணத்தினைச் செலுத்தி பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை தயாராக உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 106 அரச பேருந்து சாலைகளில் 85 பேருந்து சாலைகள் இலாபத்துடன் இயங்குகின்றன.

இதன்காரணமாக தேவையாகவுள்ள பேருந்துகளை கொள்வனவு செய்து கொள்ள அந்தந்த பேருந்து சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட ஹட்டன் பேருந்து சாலையினால் 12 பேருந்துக்கள் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

Related posts:

ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர...
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை - சுற்றாடல் அமை...
வெளிநாடுகளில் உள்ளவர்கள் உள்நாட்டில் லிட்ரோவை கொள்வனவு செய்ய வசதி - மொபைல் செயலியை அறிமுகம் செய்தது ...