பேருந்து  கேர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் படுகாயம்!

Monday, October 10th, 2016

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று தலவாக்கலை – டயகமபிரதான வீதியில் மொராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (10) காலை 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாகஅக்கரப்பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயங்களுக்கு உள்ளாகியவர்கள் அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளைபெற்ற பின் வீடு திரும்புவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயங்களுக்குள்ளாகியவர்களில் ஆண்கள் 40 பேரும், பெண்கள் 32 பேரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளனர். இதேவேளை, விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: