பேருந்து கட்டண சீர்திருத்தம் தொடர்பில் மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

Thursday, December 6th, 2018

பேருந்து கட்டணங்களை குறைக்கும் வகையிலான தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பேருந்து கட்டண சீர்திருத்தம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்ட நிலையில் மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேருந்து கட்டணங்களுக்கான திருத்தங்களின் சதவீதம் எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில் பேருந்து கட்டணங்களையும் குறைக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: