பேருந்து கட்டணம் அதிகரிப்பால் சங்கங்களுக்கு இடையில் மாறுபட்ட கருத்து!

Wednesday, July 13th, 2016

ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 6 வீதமாக உயர்த்துவதற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆயினும் குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், பேருந்து கட்டண அதிகரிப்பு தொடாபில் பேருந்து சங்கங்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

இந்த பேருந்து கட்டண அதிகரிப்பு போதுமானதல்ல என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனத்தின் தலைவர் அன்ஜன பிரியான்ஜித் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறுந்தூர பேருந்து சேவைகளுக்காக இந்த பேருந்து கட்டண அதிகரிப்பு எந்த வகையிலும் ஏற்றக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டணத்தை ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் 3.2 வீதத்தினால் அதிகரிக்கவே அரசாங்கம் உத்தேசித்திருந்தது எனவும், தமது சங்கத்தின் போராட்டத்தினாலேயே 6 வீத உயர்வு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 6 வீத பேருந்து கட்டண அதிகரிப்பு போதுமானது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இதனை விடவும் அதிகளவு கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பேருந்துகளில் பயணிப்பதனை குறைத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Related posts: