பேருந்து கட்டணத்தை 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்பு!
Wednesday, March 29th, 2023எரிபொருள் விலை திருத்தத்தையடுத்து, பேருந்து கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளைமறுதினம் (31) முதல் 30 ரூபாவாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் குறைக்கப்படவுள்ள ஏனைய பேருந்து கட்டணங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த பேருந்து கட்டண திருத்தத்துக்கு தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து - புவிச் சரிதவியல் அளவை மற...
பாடசாலை மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியரும் மாணவர்களும் காயம்!
|
|