பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, June 16th, 2016

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மிகக்குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாயை நிர்ணயிக்குமாறும் ஏனைய கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும்  என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால், ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு முதல், பஸ் சேவையை இடைநிறுத்தி சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அந்தச் சங்கம் இதனைக் கூறியது.

Related posts: