பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர்!

Monday, December 24th, 2018

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இது குறித்து பேருந்து சங்கங்கள் தெரிவிக்கையில் அவ்வாறு எவ்வித கலந்துரையாடலுக்கும் தமக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தினை 4 – 5 வீதங்களால் குறைக்க முடியும் என அனைத்து இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் பிரதம செயலாளர் அங்ஜன பிரியஞ்சித் தெரிவித்திருந்தார்.

 

Related posts: