பேருந்து கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க கோரிக்கை!

Friday, July 1st, 2016

வருடாந்த பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று (01) முதல் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் 03ம் திகதி முதல் போராட்டத்தில் இறங்குவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்ஞன பிரியன்ஜித் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் பஸ் கட்டண அதிகரிப்பை இன்று முதல் பேருந்து சங்கங்கள் எதிர்பார்க்கின்றன. எவ்வாறாயினும் இந்த பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து அண்மைய நாட்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், இறுதி முடிவொன்றை எட்டுவதற்கு பேருந்து சங்கங்களுக்கோ அல்லது போக்குவரத்து அமைச்சுக்கோ முடியாது போயுள்ளது.

பேருந்து கட்டணம் தொடர்பான தேசிய கொள்கையின் படி நூற்றுக்கு 3.2 வீததிற்கு மேல் கட்டண அதிகரிப்பை வழங்க முடியாது என்று போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் இதுவரை அதிகரிப்பு இணக்கப்பட்டுக்கு வர முடியாதுள்ளது. பேருந்து சங்கங்கள் அதை விட அதிகமான கட்டண அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: