பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்?- தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் !

பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியான்ஜித்கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்வதால் ஒட்டுமொத்த பஸ் கைத்தொழிலும் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. இந்நிலையில் டீசலின் விலைஉயர்த்தப்பட்டால் அது பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியன பஸ் கைத்தொழில்துறையில் தாக்கம் செலுத்தும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனுவிஜேரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட உள்ள பஸ் கட்டணத் திருத்தங்களின் போது கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|