பேருந்துகளில் பயணிகளை அடையாளப்படுத்தும் கருவி!

Monday, April 29th, 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பேருந்துகளில் பயணிக்கும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பேருந்தில் மின்னணு தொடர்பாடல் கருவி பொருத்துவது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இத்தொடர்பாடல் கருவியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேர்தன தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் பின்பக்கத்தில் பொருத்தப்படும் இக்கருவி ஊடாக வெடிப்பொருட்களுடன் பேருந்தில் ஏறும் பயணிகள் தொடர்பில் சாரதிக்கு அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: