பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை – பொலிஸார் அறிவிப்பு!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகளில் ஒரு அங்கமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது, பேருந்துகளில் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் பேருந்துகளில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, பொலிஸ்மா அதிபருக்கு விசேட அறிவுறுத்தல் பத்திரமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாத இறுதியில் 5, 473 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
கடும் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன மதுபான நிலையங்களை – யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையின் மத்தியிலும் ...
இலங்கையில் நல்லிணக்க முயற்சி, பயங்கரவாதத் தடை சட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுக்கு அமைச...
|
|