பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய புதிய செயலி!

CTB Wednesday, July 11th, 2018

தூர பிரதேசங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு புதிய செயலியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கான செயலி (மொபைல் அப்ளிகேசன்) அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த செயலியின் ஊடாக புறக்கோட்டையிலிருந்து தூர பிரதேசங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் ஆசனங்களை வீட்டில் இருந்து கொண்டே ஒதுக்கீடு செய்ய முடியும்.

எந்தவொரு மாவட்டத்திற்கும் பயணிக்கும் பேருந்துகளில் ஆசன ஒதுக்கீட்டினை இந்த செயலியின் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும். இதேவேளை விரும்பிய ஆசனத்தை விரும்பிய தூரத்திற்கு ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது சாதாரண பேருந்து கட்டணங்களை விடவும் 80 ரூபா மேலதிகமாக செலுத்த நேரிடும் எனவும் எதிர்வரும் நாட்களில் ஏனைய பிரதான நகரங்களிலும் இந்த செயலியின் ஊடாக பேருந்து ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறைமை அறிமுகம் செய்யப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இலங்கை வெளிவிவகார அமைச்சு இடமாற்றம் !
மூன்று இளைஞர்கள் கைது - யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் மீட்பு!
வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கைது!
மலேரியாவை பரப்பும் நுளம்பினம் 270 கிணறுகளில் கண்டுபிடிப்பு - யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணி...