பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு – திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!

திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
எனவே, மாகாண பேருந்துகளில் சோதனையிடுவதற்கு அனைத்து நடமாடும் சோதனை அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைக்கப்பட்டுள்ள பல நடமாடும் சோதனை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன் அபராதம் விதிக்கப்பட்டு, சம்பவங்களில் ஈடுபட்ட சில பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|