பேருந்தில் பணம் பறித்த “பட்டா கும்பல்” பருத்தித்துறையில் கைது!

யாழ்.நகரில் இ.போ.சபை பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு நடத்துனரிடம் பணப்பையை அபகரித்துச் சென்ற குற்றச்சாட்டில் 11 பேரைக் கொண்ட “பட்டாகும்பல்” பருத்தித்துறையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரில் வைத்தியசாலை வீதியில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் இ.போ.சபை பேருந்தின் மீது பட்டா வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடினர். இவ்வாறு தாக்குதல் மேற்கொண்;ட கும்பல் பேருந்தின் நடத்துனரிடம் இருந்த பணப்பை மற்றும் சிட்டை புத்தகம் என்பவற்றையும் அபகரித்து சென்றனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, பட்டா வாகன இலக்கம் கிடைக்கப்பெற்றது. அதன் பிரகாரம் வாகன உரிமையாளர் இனம் காணப்பட்டார். யாழ்ப்பாணம் பொலிஸார் பருத்தித்துறைப் பிரதேசத்துக்குச் சென்று 11 பேரைக் கொண்ட “பட்டா கும்பலை” நேற்று மாலை கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
|
|