பேரிடர் உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு!

Sunday, May 22nd, 2016

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 118 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவ மையம் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும், மத்திய மாகாணத்தில் உள்ள கேகாலையில் பல சடலங்களை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், தொடர்ந்தும் மலையகத்தில் ஆங்காங்கே நிலச்சரிவு அபாயம் இருப்பதால் மக்களிடையே பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, அதிகளவான குடும்பங்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

160522070152_srilanka_flood_photos_640x360_getty

160522070400_srilanka_flood_photos_640x360_getty_nocredit

160522070307_srilanka_flood_photos_640x360_getty

Related posts: