பேராயர் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு!

Monday, April 29th, 2019

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை அடுத்து தேவாலயங்கள், ஆலயங்கள், மசூதிகள் என்பவனவற்றுக்கு பாதுகாப்புப்க்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், தேவாலயங்களில் ஒன்று கூடும் மக்கள் தற்போது அச்சநிலையில் இருக்கின்றனர்.

இதேவேளை, பொலிஸார் நடத்திவரும் தேடுதல் நடவடிக்கைகளின் போது அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்படுவதுடன், பலர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நாட்டில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதேவேளை, பாதுகாப்புப் படையினரும் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: