பேராதனை பொலிஸ் நிலையம் மீளமைக்க 14 கோடி ஒதுக்கீடு!

Thursday, November 10th, 2016

பேராதனை பொலிஸ் நிலையத்தினை மீளமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றைய சமகால தேவைகளை நிறைவேற்றும் வகையில் சகல வசதிகளையும் கொண்டதாக பொலிஸ் நிலையத்தை மீள் நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 14 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்படும் என்று நிதி ஒதுக்கீடு தொடர்பில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

1d9f3230b4bfe4c364a9c96a697a3ee2_XL

Related posts: