பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவுப்பேருரைநிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுசிறப்பிப்பு!

Friday, July 15th, 2016

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் ஐந்தாவது நினைவுதினத்தை முன்னிட்டு நடைபெற்ற நினைவுப் பேருரை நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தழிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்றையதினம் நினைவுப் பேருரைநிகழ்வு நடைபெற்றது. முன்பதாக பேராசிரியர் சிவத்தம்பியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவையோரால் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பேராசிரியர் சபா ஜெயராசாதலைமையில் நடைபெற்றநினைவுப் பேருரைநிகழ்வில் பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பான அறிமுகவுரையையும் தொடக்க உரையையும்  மதுசூதனன் நிகழ்த்தினார்.

இதன்போது யாழ். பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருபவருமான பேராசிரியர் நித்தியானந்தன் “இலங்கையின் வடபிரதேச அபிவிருத்தியின் சமூககலாசாரப் பரிமாணங்கள்”என்னும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.

இந்தநிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார்.

அமரர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணிவந்த போதிலும் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீண்டகாலமாக நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

DSCF1269+
DSCF1270+
DSCF1308+

Related posts: