பேச்சுக்கள் தோல்வி – புறக்கணிப்பை தொடர தீர்மானம்!

Tuesday, September 19th, 2017

மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படும் தொடர் சேவை புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அச்சங்கதினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றுத் தொழில்துறை அமைச்சர் டபிள்வ் டி.ஜே செனவிரத்ன ஆகியோருக்கிடையில் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்ட மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றுத் தொழில்துறை அமைச்சர் டபிள்வ் டி.ஜே செனவிரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு தொடர்ந்தும் இடம்பெறுகிறது குறித்த சந்திப்பின் முதற்கட்ட பேச்சுவார்தை தோல்வியடைந்த நிலையிலே கலந்துரையாடல் தொடர்கின்றது.

கலந்துரையாடல் இடம்பெறுகின்ற போதிலும் சேவைப்புறக்கணிப்பு தொடர்வதாக மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்

Related posts: