பேசுவது உரிமை பெறுவது சலுகை – நல்லூரில் ஈ.பி.டி.பி விந்தன் !

Monday, March 20th, 2017

தேர்தல் காலத்தில் உரிமை பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கியவர்கள்  பதவி நாற்காலி கிடைத்தவுடன் தமது சொந்தச் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொண்டு மக்களின் உரிமை குறித்து எந்தவித கரிசனையும் இன்றி பாராமுகமாக இருந்தவருகின்றார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனின் ஒழுங்கமைப்பில் நேற்றையதினம் (19) நடைபெற்ற வட்டார ரீதியான கட்சி ஆதரவாளர்களுடனான விஷேட கூட்டத்தின்போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

இணக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல. அது மதிநுட்ப சிந்தனை வழியிலானது. 1994 இல் நாம் ஒன்பது நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றிருந்தோம். அப்போது ஆட்சி அமைப்பதற்கு போதிய பலம் இருந்த சந்திரிகா குமாரணதுங்க அவர்களுக்கு நாம் மேலதிகமான ஒரு ஆதரவைத்தான் வழங்கியிருந்தோம்.

அதற்கு உபகாரமாக அமைச்சுப் பதவி தேவையா எனக் கேட்டார்கள். மறுத்துவிட்டோம். பிரதிக் குழுக்களின் தலைவர் பதவி தேவையா எனக் கேட்டார்கள். அதையும் நாங்கள் மறுத்துவிட்டோம்.  எமது கட்சிக்கு எதுவும் வேண்டாம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை மட்டும் வழங்குங்கள். இவ்வாறு வலியுறுத்தியே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இணக்க அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார்.

நாம் கேட்டபடி வரலாற்றில் ஒருபோதுமே வழங்கப்பட முடியாத பிராந்தியங்களின் சுயாட்சி என்ற மிகச் சிறந்த தீர்வு வழங்கப்பட்டது. ஆனாலும் வழமையான எதிர்க்கட்சி ஆழும் கட்சி போட்டிக்கள் நுழைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் அந்தத் தீர்வு நகல்களை எரித்து அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்று துரோகத்தை கூற இங்க நான் வரவில்லை.

அன்று நாம் அரசுக்கு ஆதரவு அளித்து இணக்க அரசியலில் பிரவேசித்ததுபோல் இன்று போதிய அரசியல் பலத்தோடு இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த ஆட்சியை உருவாக்கியது தாமே என்று தம்பட்டம் கூட அடிக்கின்றார்கள்.

அரசுக்கு ஆதரவுளித்ததற்கு உபகாரமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசிடம் எதைக்கேட்டது? எதிர்க்கட்சி பதவியைக்கேட்டார்கள். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியைக் கேட்டார்கள். மாவட்ட ஒரங்கிணைப்பக் குழுக்களின் தலைமை பதவிகளைக் கேட்டார்கள். வரிச்சலுகை அற்ற சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிக்கேட்டார்கள்.

இதில் தமிழ் மக்களுடைய நலன்சார்ந்து ஏதாவது ஒரு கோரிக்கையை கேட்டார்களா? பெற்றார்களா? இல்லை… ஆகவே நாம் முன்னெடுத்த இணக்க அரசியல் மக்களின் உரிமைக்கானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் இணக்க அரசியல் அவர்களது சொந்தச் சலுகைகளுக்கானது. கடந்த ஆட்சியில் குறைந்த பட்ச அரசியல் பலத்தோடு இருந்தும் நாம் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததில் ஒரு துளிகூட இன்று போதிய அரசியல்ப்பலத்தோடு இருப்பவர்கள் புதிய ஆட்சியில் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் தேரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோருடன் கட்சியின் பிரதேச நிர்வாக முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும்  கலந்துகொண்டிருந்தனர்.

17408175_1351926381513112_1226669262_o

Related posts: