பேக்கரி உற்பத்திகளுக்கான பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, April 7th, 2021

பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமை தொடர்பில் இதன்போது வெளிக்கொணரப்பட்டது.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன இதன்போது கூறியுள்ளார்.

எனவே, இயலுமானவரை மிக விரைவில் இந்த அறிக்கைகளை அமைச்சரவைக்கு எடுத்து, அதனை பாநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த ஆட்சிக் காலத்தில் எந்த நிறுவனத்தினும் ஆண்டறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை விரைவில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: