பொறுப்புகளை நிறைவேற்ற முடியாதென்றால் இராஜினாமா செய்யவும் – ஜனாதிபதி!
Saturday, February 18th, 2017தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத அனைத்து அதிகாரிகளும் தமது பதிவிகளிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வறட்சி நிலைமை காரணமாக விவசாயத்துறை எதிர்நோக்கும் தாக்கம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மண் அகழ்வது தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு, மாதாந்தம் பத்தாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
Related posts:
முன்பள்ளி சிறுமியின் விரல் அகற்றப்பட்டது. குறித்து விசாரணை!
யாழில் காணிகளை கண்காணித்த அமெரிக்க பிரதிநிதிகள்!
சிறுவரிடமிருந்து சிறுவருக்கு கொரோனா பரவுவது மிகவும் குறைவு - சிறுவர் சுவாச சிகிச்சை மருத்துவ நிபுணர...
|
|