பெற்றோல் தட்டுப்பாடு: முகவர்களே காரணம் என்கிறது அரசாங்கம்!
எரிபொருள்களின் விலைகள் குறையப் போவதாக தெரிவிக்கப்படும் தகவல்களை மையப்படுத்தி தம்மிடம் கையிருப்பில் உள்ள எரிபொருள்களை விற்பனை செய்து கொள்ள முன்னெடுக்கும் உத்தியே எரிபொருள் தட்டுப்பாடுக்கான பரப்புரையாகும் என பெற்றோலிய வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முதலில் கப்பலில் வந்த எரிபொருள் தரமற்றது என்ற காரணம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், எரி பொருள் விலை குறையப் போவதாகவும் ஒரு செய்தி காணப்படுகின்றது.இதனைக் கருத் தில் கொண்டு தங் களிடமுள்ள அதிக விலைக்கு கொள் வனவு செய்யப்பட்ட எரிபொருள்களை விநியோகித்து முடித்துக் கொள்ள முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையே இந்த பொய்யான பரப்புரையாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துக்கான எரிபொருள் கப்பல் செவ்வாய்க்கிழமையே கொழும்பை வந்தடையும் என்றும் புதன்கிழமை வரை மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள்கள் விநியோகமே இடம்பெறும் என்றும் கூட்டுத்தாபனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|