பெற்றோல் சர்ச்சை:  CID விசாரணை!

Thursday, November 16th, 2017

நாட்டில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்(CID) விசாரணைக்கு, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த பெற்றோல் நெருக்கடி தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, அமைச்சரவைச் செயற்குழுவின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இவ்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தாலும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தினாலும், பெற்றோலுக்காக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் இரண்டுமே, ஒரே நேரத்தில் எவ்வாறு தாமதமாகின என, சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

எரிபொருளுக்கான கொள்முதல் கட்டளையை வழங்கிய பின்னர், நாட்டுக்கு அக்கப்பல் வருவதற்கு, 21 நாட்கள் தேவைப்படும். சில நிலைமைகளில், குறைந்தது 62,000 தொடக்கம் 65,000 மெற்றிக் தொன் பெற்றோல், இக்காலத்தில் கையிருப்பில் இருந்திருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, இவ்விடயம் தொடர்பில் சி.ஐ.டி விசாரணைக்கு, அமைச்சர் அர்ஜுனவால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts: