பெற்றோல் குண்டுத் தாக்குதல்: கல்வியங்காட்டில் வாள் வெட்டுக் குழு அட்டகாசம்!

Friday, August 13th, 2021

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதிக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடி மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திய  வாள் வெட்டுக்குழு, அங்குள்ள பொருட்களை உடைத்து சேதமாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு பல்பொருள் அங்காடி அமைத்துள்ள இடத்திற்கு, இலக்கம் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில், வாள்களுடன் வந்த சந்தேகநபர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பல்பொருள் அங்காடி கண்ணாடிகள், வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பல்பொருள் அங்காடி உரிமையாளர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய, கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: