பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Wednesday, May 18th, 2022

இன்றையதினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், வழமையான எரிபொருள் விநியோகம் நாளைமுதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பெற்றோல் தாங்கிய கப்பலொன்று, இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 15 நாட்களில் நான்கு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாளை (19) மற்றும் ஜூன் 1 ஆம் திகதிகளில் டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 5 எரிபொருள் தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று கச்சா எண்ணையை கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கு கடந்த 8 நாட்களாக டொலரை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: