பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் சந்திம வீரக்கொடி

Saturday, May 7th, 2016

நாட்டில் பெற்றோலிய தட்டுப்பாடு நிலவுவதற்கு இடமளிப்பதில்லை என்று பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

தான் குறித்த அமைச்சைப் பொறுப்பேற்றதன் பின்னர அவ்வாறான ஒரு நிலமை ஏற்படவில்லை என்றும் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கும் இடமளிப்போவதில்லை என்று அமைச்சர் கூறினார்.

மலேசியாவுடன் இணைந்து முத்துராஜவல கணிய எண்ணெய் தயாரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இன்று குறித்த அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு கூறி இருந்தார்.

ஒரு வருடத்திற்குள் குறித்த நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

Related posts: