பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது – அர்ஜூன ரணதுங்க!
Tuesday, October 10th, 2017இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றினார். எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எரிபொருளின் விலையை குறைத்து நட்டத்திற்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. இதனால் எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை அறிமுகம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கனிய வள அபிவிருத்தி அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்
Related posts:
நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க அச்சமடைய வேண்டாம் – அம...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது - தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான்...
தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பின...
|
|
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன – நாளையும் சேவைகளை முன்னெடுக்கப்படும் என வ...
யாழில் கல்வித் தகுதி குறைந்த விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறி - ஓய்வுபெற்ற அதிபர் சுட்...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி – துரிதகதியில் முன்னெடுக்கப்படும் இணுவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கான ...