பெற்றோலிய கூட்டுத்தாபன வருமான இழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – ஜனாதிபதி ஆணைக்குழு!

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் ஆறு கோடிக்கும் அதிகமான வருமான இழப்பு சம்பந்தமாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
கூட்டுதாபனத்தின் தகவல் தொழினுட்ப பிரிவின் செயற்பாடுகளுக்கு விரோதமாக மற்றுமொரு தெரிவு செய்யப்பட்ட எண்ணெய் உரிமையாளரின் கூட்டுதாபன அனுமதிபத்திரத்தை இரத்து செய்தமை மற்றும் எண்ணை நிரப்பு மத்திய நிலையத்தை மாற்றியமையால் ஆறரை கோடி வருமானம் இல்லாது செய்யப்பட்டதாக தெரிவித்து குறித்த முறைபாடு பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனதின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மூன்று அடிப்படை விசாரணைகளுக்கு அமைய கூட்டுதாபனத்தில் 366 மில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றதாக தெரியவந்ததது.
அதற்கமைய செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
Related posts:
|
|