பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் 1613 மில்லியன் நட்டம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் பாரிய நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்..

அதனபப்படையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு நாளாந்தம் 1,613 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.

சர்வதேச சந்தையிலும் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு டொலரின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளது.

நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்தநிலையிலேயே தொடர்வதற்கு மேலும் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான பின்னணியில் நட்டத்துடன் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: